தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அவல நிலை உருவாகியிருப்பதாகவும், தற்போதைய அரசு மக்களுக்கு மிகத் துயரமான ஆட்சியை வழங்கி வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆறு மாதங்களில் தமிழகத்தில் மிகச் சிறப்பான ஆட்சியை வழங்குவோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்த நிலையில், அதற்கு மாறாகத் தற்போது சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், தீபாவளி திருநாளன்று மட்டும் மாநிலம் முழுவதும் 11 கொலைகள் அரங்கேறியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அமைச்சர் ராஜ்மோகன் அவற்றை முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியான அணுகுமுறை அல்ல எனக் கண்டித்துள்ள இபிஎஸ், கொலைகள் நடக்காமல் தடுக்க அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போதைய ஆட்சியில் சாமானிய மக்களுக்கு மட்டுமின்றி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டு, மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.