X

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இந்த வானிலை அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Tags: Chennairain