X

தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்க்கி வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சென்னை பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்தை ஊட்டி, இவ்வாண்டிற்கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமினை முறைப்படி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பிறந்தது முதல் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ பாதிப்பு இல்லாத ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த முகாம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், முதற்கட்டமாக முதலமைச்சர் முன்னிலையில் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கப்பட்டதோடு, அவர்களுக்குப் பாராட்டுத் தலா ஒரு மென்மையான பொம்மைப் பரிசும் வழங்கி மகிழ்விக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் அனைவரும் தங்களின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விடுபடாமல் சொட்டு மருந்து வழங்கித் தங்களின் முழுப் பங்களிப்பை நல்க வேண்டும் எனச் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.