தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் திமுக பயணித்து வருகிறது. இதற்காக 22 கட்சிகளை ஒருங்கிணைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்டமான கூட்டணியை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், வரும் மார்ச் 31 ஆம் தேதி திருவாரூரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
மேலும், ஏப்ரல் 21 ஆம் தேதி வரை தேர்தல் பிரசாரத்தை தொடரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது தொகுதியான கொளத்தூரில் பிரசாரத்தை இறுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.