அணு ஆயுதங்கள் தொடர்பான செயல்களை மேம்படுத்த மாட்டோம், என்று ஈரான் உறுதிப்பூண்டுள்ளது. இதை வரவேற்பதாக தெரிவித்த சீனா, ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறந்து விடுங்கள் என்று ஈரானிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறுகையில், “ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான விவகாரத்தில், அந்த ஜலசந்தி வழியாக இயல்பான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து சர்வதேச சமூகம் ஒருமித்த கவலையை பகிர்ந்து கொள்கிறது. மேலும், சர்வதேச சமூகத்தின் இந்த கடுமையான வலியுறுத்தலுக்கு தொடர்புடைய தரப்புகள் கூடிய விரைவில் பதிலளிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு விரிவான போர் நிறுத்தத்தை எட்டுவது அவசர முன்னுரிமை என்றும், அதே வேளையில் மீண்டும் மோதல்களைத் தொடங்குவது அதைவிடவும் மிகவும் விரும்பத்தாகதது என்றும் சீனா கருதுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.