சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
அமலாக்கத்துறையின் கடிதம் குறித்து விசாரணை நடக்கும் நிலையில் கே.என்.நேருவின் தேர்தல் பணியை முடக்குவதற்காக சதி நடக்கிறது. 2016ல் கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ப.சிதம்பரத்தை கைது செய்து 100 நாள் சிறையில் வைத்தார்கள், அந்த அமலாக்கத்துறையின் வழக்கு என்னவானது?
அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.