பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னையின் ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிந்த உடன் மின் விநியோகம் வழங்கப்படும்.
நாளை (மே 20) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் நாளை (20.05.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பொழிச்சலூர் : திரு நகர், பத்மநாபா நகர், ஞானமணி நகர், பவானி நகர், பிசிஎஸ் காலனி, ராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பிரேம் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், விநாயகா நகர், சண்முகா நகர், தீப்பாஞ்சி அம்மன் கோவில் தெரு, எல்.ஆர்.ராஜமாணிக்கம் தெரு.
திருமுடிவாக்கம் : இந்திரா நகர், குரு நகர், விவேகாந்த நகர், பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.