X

ஐபிஎல் 2026 – சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 63 வது லீக் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, துவக்க வீரர்களாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முறையே 27 மற்றும் 15 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய உர்வில் படேல் 13 ரன்களும், கார்த்திக் சர்மா 32 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். டெவால்டு பிரெவிஸ் 44 ரன்களும், ஷிவம் துபே 26 ரன்களும் அடித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சேன்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் முறையே 26 மற்றும் 6 ரன்களில் ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் இறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த கிளாசனும் அதிரடியாக விளையாடி 47 ரன்களை குவித்தார்.

இறுதியில் 19 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.