சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், தொகுதிக்குட்பட்ட நல்வாழ்வு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, அவரது கணவர் சபரீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்களிடம் பேசிய சபரீசன், “நாங்கள் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தல் களத்தை சந்திக்கிறோம். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு சிறப்பாக இருக்கிறது. மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும். 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இந்த தேர்தலில் த.வெ.க எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 2 தொகுதிகளில் போட்டியிடுவது என்பது அந்த தலைவரின் தன்னம்பிக்கையின்மையை காட்டுகிறது.” என்றார்.