நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று வருவார் என்று பரவிய தகவலால், அதிகாலை 3 மணி முதலே ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் அங்கு குவியத் தொடங்கினர். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் விஜய் வராததால் ஏமாற்றமடைந்த அவர்கள், ஆலய வளாகத்தில் ‘தவெக தவெக’ என்று முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களின் இந்த தொடர் கோஷங்களால் பேராலயத்தில் நடைபெற வேண்டிய அதிகாலை திருப்பலி பூஜை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதுடன், அங்கு வந்திருந்த மற்ற பக்தர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.