ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார். இந்தநிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் வைத்திலிங்கம் இணைந்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சசிசலா கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது துரதிருஷ்டவசமானது. தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம். திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் அதிமுகவினர் செயல்படுவதால் வேதனை அளிக்கிறது.
இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். ஒரு சிலரின் சுயநலத்தால் நடக்கிறது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.