கடந்த ஆண்டு என் மருத்துவ மையத்திற்கு ஒரு பெண் சிகிச்சைக்காக வந்தார் பல மாதங்களாக அவர் தன்னில் ஏதோ மாற்றம் இருப்பதை அவர் உணர்ந்தார் காரணமின்றி அதிக சோர்வு. வழக்கத்தைவிட அதிகமாக முடி உதிர்தல். மாதவிடாய் வந்தாலும், வழக்கம் போல் இல்லாமல் மாறுபாடு. அதை அவர் தனது கடுமையான வேலைப்பளு மற்றும் தூக்கக்குறைபாடு காரணமாக நினைத்தார். அவர் கர்ப்பமாக முயற்சிக்கத் தொடங்கிய போது தான் மருத்துவரை சந்திக்க வந்தார்.
இரத்த பரிசோதனை வேறொரு கதையைச் சொன்னது:
குறிப்பிடத்தக்க வைட்டமின் D குறைபாடு, இரும்பு அளவு குறைவாக இருந்தது மற்றும் B12 குறைபாடு. இதற்கு முன்பு இவற்றில் எதுவும் பரிசோதிக்கப்படவில்லை.
“இது என் கிளினிக்கில் தொடர்ந்து எதிர் கொள்ளப்படும் ஒரு நிலை என்று சென்னை பிர்லா கருத்தரிப்பு மற்றும் IVF நிறுவனத்தின் மகப்பேறு நிபுணர் டாக்டர் ஷைலா உஸ்மான் அலி கூறுகிறார்.
புள்ளிவிவரங்கள்மிகவும்முக்கியமானவை:
இந்தியா உலகளவில் மிக உயர்ந்த அளவில் மைக்ரோ நியூட்ரியன்ட் குறைபாடு உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. வெளியிடப்பட்ட ஆய்வுகளின்படி, இந்திய மக்கள் தொகையில் சுமார் 54% பேருக்கு இரும்புச்சத்து குறைபாடு உள்ளது, 53% பேருக்கு வைட்டமின் B12 குறைபாடு உள்ளது, மேலும் சுமார் 61% பேருக்கு வைட்டமின் D குறைபாடு உள்ளது. வைட்டமின் D குறைபாடு மட்டும் இந்திய துணைக் கண்டத்தில் மிகவும் பரவலாக உள்ளது. பொது மக்களில் இதன் அளவு 70% முதல் 100% வரை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவை சிறிய எண்ணிக்கைகள் அல்ல, மேலும் இது வழக்கமான பரிசோதனை இல்லாமல் இருக்கும் பல பெண்களின் நிலையை பிரதிபலிக்கிறது.
இந்த ஊட்டச்சத்து குறைபாடுகள் கர்ப்பத்திறனை பாதிக்கும் விதம்:
முக்கிய ஊட்டச்சத்து குறைபாடுகள் ஓவுலேஷன் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கக்கூடும் மற்றும் கர்ப்பகால சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். ஆய்வுகள் தெரிவிப்பதாவது,
நடுத்தர முதல் கடுமையான அயோடின் குறைபாடு உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு சுழற்சியிலும் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்பு 46% குறைவாக உள்ளது. குறைந்த B12 அளவு ஹார்மோன் மற்றும் மெட்டபாலிசம் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது; இது கருவின் பதிப்பை (implantation) ஆதரிக்கும் செயல் முறையையும் குலைக்கலாம். தனித்தனியாக சரி செய்யக்கூடியவை என்றாலும், கண்டறியப்படாமல் நீண்ட காலம் தொடரும் போது இவை ஒன்றாக சேர்ந்து பிரச்சினையை மெதுவாக அதிகரிக்கின்றன.
சிறிய முயற்சிகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்:
● ஆண்டு தோறும் அடிப்படை இரத்த பரிசோதனை செய்து, இரும்பு, வைட்டமின் D, B12, ஃபோலேட் மற்றும் தைராய்டு செயல்பாட்டை பரிசோதிக்கவும்
● பருப்பு வகைகள், கீரை மற்றும் ராகி போன்ற இரும்பு நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்கவும்
● வைட்டமின் D அளவை மேம்படுத்த தினமும் காலை 20 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரம் செலவிடவும்
● பெரும்பாலும் சைவ உணவு பின்பற்றினால், மருத்துவரை ஆலோசித்த பிறகு B12 சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ளவும்
● அதிகமாக செயலாக்கப்பட்ட (processed) உணவுகளை குறைக்கவும்; அவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை மாற்றி இடமாற்றம் செய்கின்றன
கர்ப்பம் அடைவதற்கான முயற்சி தான் பெரும்பாலும் பரிசோதனையைத் தொடங்கும் முதல் முக்கிய காரணமாகிறது. குறைபாடுகள் எவ்வளவு விரைவாக கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக அவற்றை சரி செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. கர்ப்பம் முயற்சிக்கும் முன் செய்யப்படும் ஒரு எளிய ஊட்டச்சத்து பரிசோதனை கூட, எதிர்காலப் பயணத்தை மிகவும் எளிதாக்க முடியும் குழந்தை பெற முயற்சி செய்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை—உங்கள் உடல் நலத்தை தெளிவாக அறிந்து கொள்ளும் உரிமை உங்களுக்கே உரியது.