X

பாட்டில் குடிநீர் விற்பனை தொடங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திட்டம்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) நிறுவனம், நாடு முழுவதும் உள்ள தனது 43,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் (Petrol Bunks) மூலம் சொந்தமாக அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water) பிராண்டை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

எரிபொருள் விற்பனையோடு சேர்த்து வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அத்தியாவசியச் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் முயற்சியாக இந்த புதிய வணிகத் திட்டம் பார்க்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரை நியாயமான விலையில் நெடுஞ்சாலைப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதும், தனது சில்லறை விற்பனை வலையமைப்பைப் பயன்படுத்தி வர்த்தக வாய்ப்புகளை விரிவாக்குவதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்தியன் ஆயில் நிலையங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் நிலையில், சந்தையில் உள்ள பிற முன்னணி குடிநீர் பிராண்டுகளுக்குப் போட்டியாக இச்சேவை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.