X

பயன்பாட்டில் இல்லாத சுமார் 1.58 கோடி குடும்ப அட்டைகளின் சலுகைகளை முடக்க மத்திய அரசு நடவடிக்கை!

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகப் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் எவ்வித அத்தியாவசியப் பொருட்களையும் பெறாத நாடு முழுவதும் உள்ள சுமார் 1.58 கோடி ‘பயன்பாட்டில் இல்லாத’ (Inactive) குடும்ப அட்டைகளின் சலுகைகளை முடக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

போலி மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டுகளைக் கண்டறிந்து நீக்கவும், உண்மையான பயனாளிகளுக்கு உணவுப் பொருட்கள் சரியாகச் சென்று சேர்வதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட அட்டைகள் உடனடியாகத் தரவுதளத்தில் இருந்து நீக்கப்படாமல் தற்காலிகமாக மட்டுமே முடக்கப்படும் என்றும், பயனாளிகள் தங்களை உண்மையான பயனாளிகள் என நிரூபிக்க 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் தங்களது நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று e-KYC நடைமுறையைச் பூர்த்தி செய்து தகுதியை உறுதிப்படுத்தினால், முடக்கப்பட்ட ரேஷன் அட்டைகள் உடனடியாக மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதுவரை நாடு முழுவதும் 90.64% பயனாளிகள் e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்துள்ள நிலையில், விடுபட்ட மற்றும் நீண்ட நாட்களாகப் பொருட்கள் வாங்காத பயனாளிகள் தங்கள் பகுதி நியாயவிலைக் கடைகளைத் தொடர்புகொண்டு இந்தச் சரிபார்ப்பை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: ration card