X

பெண்களுக்கு மாதம் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க கர்நாடக அரசு முடிவு

கர்நாடகாவில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு அலுவலகங்கள், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் இந்த விடுப்பு பொருந்தும்.

சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு இது பேருதவியாக இருக்கும் என மாநில சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்த முடிவின் மூலம், பீகார், ஒடிசா, கேரளா மற்றும் சிக்கிம் போன்ற மாதவிடாய் விடுப்பை அமல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகாவும் இணைந்துள்ளது.