X

கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி – போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க

கர்நாடகத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா திப்பு ஜெயந்தியாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, கொடூரமாக கொன்றுகுவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவரும் நோக்கத்தில் மாநில அரசு நடத்துவதாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த எதிர்ப்பையும் மீறி இன்று திப்பு ஜெயந்தி விழா பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மடிகேரியில் உள்ள ஸ்ரீ ஓம்காரேஷ்வரா ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த போராட்டக்குழுவினர், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். திப்பு ஜெயந்திக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.