கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். மேலும், தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல், கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர்.
சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.