கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பாஜக அரசின் உத்தரவு நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின்பு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநில கொச்சியில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் மாணவி ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, முஸ்லிம் மாணவியை ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வர அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். மத உரிமைகள் மற்றும் RTE சட்டத்தை சுட்டிக்காட்டி, கல்வி அமைச்சர் சிவன்குட்டி ஹிஜாப் தடையை நீக்க உத்தரவிட்டார்.