X

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆபாசப் பதிவுகள் – மேயர் பிரியா சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆபாசப் பதிவுகள் மற்றும் அவதூறுகள் குறித்துக் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தலித் பெண்ணாகவும் சென்னை மாநகரத்தின் மேயராகவும் இருக்கும் தன்னைத் திட்டமிட்டுத் தரக்குறைவாகச் சித்தரித்து எக்ஸ் (X) தளத்தில் அவதூறு பரப்பிய @YarlMyn என்ற கணக்கு மீது உடனடியாக எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறை ஆணையர், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு மற்றும் தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் அவர் அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துள்ளார்.

பொது வாழ்வில் இருக்கும் பெண்களை ஆபாசமாக விமர்சிப்பதும் அரசியல் வன்மத்திற்காகத் தனிப்பட்ட முறையில் அவமதிப்பதும் எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய அவர், இது பெண்களைப் பொது வாழ்க்கைக்கு வராமல் தடுக்கும் ஒரு வகையான உளவியல் வன்முறை என்றும், பாரதிய நியாய சாக்சி (BNS) பிரிவு 79 (பெண்ணின் மானத்திற்கு இழைக்கப்படும் அவமானம்), பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்), பிரிவு 356 (மானநட்டம்), பிரிவு 336(4) (போலி ஆவணம் தயாரித்தல்), பிரிவு 352 (நோக்கத்துடன் கூடிய அவமதிப்பு), தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 67 மற்றும் 67A, வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST POA Act) பிரிவு 3(1)(r) மற்றும் 3(1)(w)(ii), தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 4 மற்றும் பெண்களின் ஆபாச சித்தரிப்புத் தடைச் சட்டம் பிரிவு 4 & 6 போன்ற பல்வேறு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தனது 5 பக்க மனுவில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்!