பணியின்போது வீரதீர செயல்களில் ஈடுபட்டுத் தியாகம் செய்த காவலர்களின் வீரத்தைப்போற்றும் வகையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற காவலர் நினைவு நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பத்தினருக்கும், கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு காவல் அதிகாரியின் குடும்பத்தினருக்கும் தலா உரிய காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5.96 கோடி ரூபாய் மதிப்பிலான காப்பீட்டு ஆணைகளை அவர் நேரில் வழங்கிக் கௌரவித்தார்.