பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, இன்று (மே 29) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளி மாணவ – மாணவியருக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்.
இந்த நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ரெ.சுமன் மற்றும் பொது மேலாளர் எல்.சுஜாதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.