X

சித்தராமையாவின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர்

2023-ல் கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றபோது சித்தராமையா பாதி ஆட்சிக் காலமும், டிகே சிவகுமார் பாதி ஆட்சிக் காலமும் முதல்வராக இருப்பது முடிவானது. சித்தராமையா இதுவரை கர்நாடக முதல்வராக இருந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு தனது பதவியை டிகே சிவகுமாருக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.

நேற்று மதியம் ஆளுநர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க சித்தராமையா சென்றார். அப்போது ஆளுநர் இல்லாததால், அவரது தனிச் செயலாளர் பங்கஜ் குமார் மேத்தாவிடம் ராஜினாமா கடிதம் வழங்கப்பட்டது. தற்பொதுழு பெங்களூரு திரும்பிய ஆளுநர் த்வார்சந்த் கெலாட், சித்தராமையாவின் ராஜினாமாவை முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளார். சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையும் உடனடியாகக் கலைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், புதிய அமைச்சர் பொறுப்பேற்கும் வரை காபந்து முதல்வராக தொடர சித்தராமையாவை ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

துணை முதல்வர் டிகே சிவகுமாரை புதிய சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று இரவே டிகே சிவகுமார் அவசரமாக டெல்லி சென்றடைந்தார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மேலிடத் தலைவர்களைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, இன்று காலையில் சித்தராமையாவும் டெல்லிக்கு விரைந்துள்ளார். கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டிகே சிவகுமார் பதவியேற்பது குறித்த இறுதி அறிவிப்பு, டெல்லியில் நடிபெறும் மேலிடக் கூட்டத்திற்குப் பிறகு இன்று மாலை அல்லது நாளைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.