X

மும்பை விமான நிலையம் மூடப்பட்டது! – 6 மணி நேரம் சேவைகள் ரத்து

மும்பை விமான நிலையத்தில் அக்டோபர் மற்றும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இரண்டு கட்டங்களாக ஓடுபாதை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக இன்று பராமரிப்பு பணி மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வைர விமான நிலையம் மூடப்படுகிறது.

பராமரிப்பு பணிகளுக்காக பிரதான ஓடுபாதை மற்றும் இரண்டாம் நிலை ஓடுபாதை மூடப்படுவதால் விமான சேவை பாதிக்கப்படும். ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி தொடர்பாக ஏற்கனவே விமான நிலையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரத்து செய்யப்பட்ட மற்றும் நேரம் மாற்றியமைக்கப்பட்ட விமானங்கள் தொடர்பாக அந்தந்த விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இணையதளம் மூலமாகவும் பயணிகள் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

மும்பை விமான நிலையத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 1000 விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.