X

ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு புதிய அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்குத் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று (ஏப்ரல் 8, 2026) ஒரு புதிய அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதில், ஈரானில் இன்னும் தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும், இந்தியத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, தூதரகத்தால் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பான வழிகளைப் பயன்படுத்தி உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தூதரகத்தின் முன் ஆலோசனையும் முறையான ஒருங்கிணைப்பும் இன்றி சர்வதேச நில எல்லைகளை அணுக முயற்சிக்க வேண்டாம் என்றும் இந்தியர்களுக்குத் தூதரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவசரத் தேவைகளுக்காகத் தூதரகத்தின் உதவி எண்களையும், மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ள இந்திய அரசு, அங்குள்ள தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.