சிபிஎஸ்இ (CBSE) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களிடையே தேவையற்ற மன அழுத்தத்தையும் ஆரோக்கியமற்ற போட்டியையும் தவிர்க்கும் நோக்கில், இந்த ஆண்டும் மெரிட் பட்டியல் அல்லது டாப் 3 ரேங்க் பட்டியலை வெளியிடப் போவதில்லை என்று வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மண்டல வாரியான பட்டியலில் விஜயவாடா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு இடங்களும் 99.79 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளன. அதனைத் தொடர்ந்து சென்னை மண்டலம் 99.58 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துப் சாதனை படைத்துள்ளது.
மாணவர்களின் தனிப்பட்ட மதிப்பெண்களை விட அவர்களின் ஒட்டுமொத்த கற்றல் திறனுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.