ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த தேடுதல் வேட்டையின்போது ஸ்ரீநகர் அருகே வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ள நிலையில், பயங்கராவதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.