X

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு

உச்சநீதிமன்ற கொலீஜியம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 8 வழக்கறிஞர்கள் மற்றும் 7 நீதித்துறை அதிகாரிகள் என மொத்தம் 15 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாகக் கடந்த மார்ச் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மொத்தம் 19 பெயர்களைக் கொலீஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில், தற்போது 15 பேருக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி வழக்கறிஞர்கள் கோவிந்தராஜன் கிருஷ்ணசுவாமி, ரஜனீஷ் பதீயில், ரமேஷ் நடராஜன், ஜி.கே. முத்துகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன், ரவிகுமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எள்ளப்பன் மனோஹரன் மற்றும் நீதித்துறை அதிகாரிகளான டாக்டர் பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என். குணசேகரன் ஆகிய 11 பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் தவிர்த்து கொல்கத்தா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றங்களுக்கும் புதிய கூடுதல் நீதிபதிகளை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.