X

பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரையிலான பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு ரூ.74.59 கோடி!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2026-ஆம் ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் ₹74.59 கோடிக்கும் அதிகமான ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின்படி, பிப்ரவரி 7-8 தேதிகளில் மலேசியப் பயணத்திற்கு ₹5.57 கோடியும், பிப்ரவரி 25-26 தேதிகளில் இஸ்ரேல் பயணத்திற்கு ₹11.92 கோடியும் செலவாகியுள்ளது. தொடர்ந்து மே 15-20 தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கான பயணத்திற்குச் சுமார் ₹33.61 கோடி (இதில் நார்வே பயணத்திற்கு மட்டும் அதிகபட்சமாக ₹17.46 கோடி) செலவிடப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 13-18 தேதிகளில் ஸ்லோவாக் குடியரசு மற்றும் பிரான்ஸ் பயணத்தில் ஸ்லோவாக் குடியரசுக்கு ₹4.77 கோடியும் (பிரான்ஸ் பயணப் பில்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன), ஜூன் 27-29 தேதிகளில் சிஷெல்ஸ் பயணத்திற்கு ₹8.22 கோடியும், ஜூலை 6-11 தேதிகளில் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பயணங்களுக்குச் சுமார் ₹10.49 கோடியும் செலவாகியுள்ளன.

இறுதிப் பில்கள் மற்றும் பிரான்ஸ் பயணச் செலவுகள் தொடர்ந்து சரிபார்க்கப்பட்டு வருவதால், முழுமையான தொகையின் இறுதி அறிக்கை விரைவில் தெரியவரும் என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அதிகாரப்பூர்வ ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Modi