X

தமிழ்நாட்டை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் தகைசால் பணிக்கான பதக்கம் அறிவிப்பு

சுதந்திர தின விழாவையொட்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்குக் குடியரசுத் தலைவர் தகைசால் பணிக்கான பதக்கமும், 17 பேருக்கு மத்திய உள் துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் குடியரசுத் தலைவர் தகைசால் பணிக்கான பதக்கத்திற்குத் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜே. விஜய் ஆனந்த், கே. ராமச்சந்திரன் மற்றும் உதவி கமாண்டன்ட் எஸ். குமார் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிறந்த பணிக்கான பதக்கத்திற்குத் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கே. சிவசங்கர், எம். சோமசுந்தரம், பி. கோவிந்தராஜு, காவல் துணை கண்காணிப்பாளர் எஸ். சண்முகம், உதவி கமாண்டன்ட் எஸ். மணிமாறன், காவல் ஆய்வாளர்கள் எஸ். மாலதி, ஜி. பத்தருன்னிசா பேகம், சி. மதிமாறன், கே. சரஸ்வதி, பி. மாரியப்பன், எஸ். லட்சுமி, ஜெயா இளவரசி, கே. கோபால், சி. லட்சுமி மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் எஸ். பாஸ்கர், ஆர். செந்தில்குமார், என். சதுரகிரி ஆகிய 17 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.