X

என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 11 மதுபான வகைகளின் விற்பனையை நிறுத்த டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள ‘என்ரிகா என்டர்பிரைசஸ்’ (Enrica Enterprises Private Limited) நிறுவனத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) மேற்கொண்ட ஆய்வில், அந்நிறுவனம் தயாரிக்கும் மதுபானங்களில் இயற்கை சார்ந்த மற்றும் செயற்கை சுவையூட்டிகள் (Natural Identical and Artificial flavoring Substance) சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது, இதை அடுத்து, அந்நிறுவனத்தின் 11 மதுபான வகைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு டாஸ்மாக் (TASMAC) நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது;

இதன்படி விஎஸ்ஓபி எக்ஸா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி, நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ ஃபைன் பிராந்தி, என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகிய 11 பிராண்டுகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 11 பிராண்டுகளையும் டெப்போக்களில் இருந்து கடைகளுக்கு அனுப்புவதையும், FL2 மற்றும் FL3 உரிமமதாரர்களுக்கு விற்பனை செய்வதையும், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் நுகர்வோருக்கு விற்பனை செய்வதையும் மறு உத்தரவு வரும் வரை உடனடியாக நிறுத்தி வைக்க டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார் அனைத்து மண்டல, மாவட்ட மற்றும் டிப்போ மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.