தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருவதைத் தொடர்ந்து, அவருக்கு திரைப்படத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்த வாக்காளர்களுக்குத் தனது நன்றி. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் எப்போதும் முன்னணியில் இருப்போம், என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஈர்க்கக்கூடிய வகையில் மிகச்சிறந்த வெற்றியைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ள பிரதமர், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் மக்களின் நலனுக்காகவும் மத்திய அரசு தொடர்ந்து அயராது பாடுபடும் என்றும், தமிழகத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ராகுல் காந்தி தொலைபேசியில் விஜயை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.