X

டிரம்பின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்த பிரதமர் மோடி

வரி விதிப்பு விவகாரத்தால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளின் வர்த்தக பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்து வந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதினுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனா, ரஷியாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவதால் டிரம்ப் திடீரென்று மோடி எப்போதும் எனது நண்பர்தான், இந்தியா-அமெரிக்கா உறவு சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தார். டிரம்பின் இந்த கருத்தை பிரதமர் மோடி வரவேற்று உள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

இந்தியா-அமெரிக்கா உறவுகள் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் உணர்வுகளையும் நேர்மறையான மதிப்பீட்டையும் ஆழமாகப் பாராட்டுகிறோம். முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்கால நோக்குடைய விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன என்று தெரிவித்து உள்ளார்.