X

தமிழகத்தில் அரிசி விலை உயர்வு! – நடுத்தர குடும்பங்கள் அவதி

பருவமழை பற்றாக்குறையால் நெல் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் அரிசி விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை அதிரடியாக அதிகரித்துள்ளது.

சென்னை மொத்த அரிசி விற்பனைச் சந்தை நிலவரப்படி (18.09.2026), 26 கிலோ பொன்னி அரிசி சிப்பம் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,800 ஆகவும், பொன்னி இட்லி அரிசி ரூ.850-ல் இருந்து ரூ.1,040 ஆகவும், சன்னரக அரிசி ரூ.1,200-ல் இருந்து ரூ.1,600 ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல 25 கிலோ பிராண்டு பொன்னி ரூ.1,450 – ரூ.1,550 வரையிலும், 30 கிலோ பாசுமதி ரூ.1,950 – ரூ.3,000 வரையிலும், சீரகச்சம்பா அரிசி ரூ.4,900-ல் இருந்து ரூ.5,400 ஆகவும் அதிகரித்துள்ளது.

மொத்த விற்பனை விலையை விட சில்லறை விற்பனை கடைகளில் கிலோவுக்கு மேலும் ரூ.5 முதல் ரூ.15 வரை கூடுதல் விலைக்கு விற்கப்பட வாய்ப்புள்ளதால், சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடும் நிதி நெருக்கடிக்கும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர்.