அமெரிக்காவின் பழமையான மற்றும் முன்னணி அகராதி பதிப்பகமான மெரியம்-வெப்ஸ்டர் (Merriam-Webster) தனது சமீபத்திய பதிப்பில், ‘ஜென் ஜி’ (Gen Z) தலைமுறையினர் இணையத்திலும் அன்றாட உரையாடல்களிலும் பரவலாகப் பயன்படுத்தி வரும் 1,400-க்கும் மேற்பட்ட புதிய வார்த்தைகள் மற்றும் பயன்பாடுகளை அதிகாரப்பூர்வமாகச் சேர்த்துள்ளது.
இதில் டிஜிட்டல் ஊடகங்கள், சமூக வலைதளக் கலாச்சாரம் மற்றும் நவீன மக்களின் வாழ்வியலைச் சார்ந்த ‘ரிஸ்’ (Rizz – ஈர்ப்புத் திறன்), ‘பிஃபேக்’ (BeFak – போலித்தன்மை), ‘ஷேட்’ (Shade), ‘சீட் போஸ்ட்’ (Shitpost) போன்ற புதுமையான பல சொற்கள் இடம்பெற்றுள்ளன.
காலமாற்றத்திற்கு ஏற்ப மொழியில் ஏற்படும் பரிணாம வளர்ச்சியையும், இளைஞர்களின் தொடர்பு மொழியை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெரியம்-வெப்ஸ்டர் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், மொழி வல்லுநர்கள் மற்றும் டிஜிட்டல் தலைமுறையினர் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.