X

விமர்சித்த தொல்.திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த சீமான்

சென்னை திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற சீமானிடம், நீங்களும், விஜய்யும் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என்று திருமாவளவன் விமர்சித்து உள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து கூறியதாவது:-

என்னையும், தம்பி விஜய்யையும் பற்றி ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என எனது அண்ணன் திருமாவளவன் கூறி இருக்கிறார். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் எங்களை பெற்றெடுத்த போது அவர்தான் அருகில் இருந்து பிரசவம் பார்த்தார்.

மேலும் காலம் காலமாக என்னை போலி தமிழ் தேசியவாதி என்றும் அவர் கூறி வருகிறார். அண்ணன்தானே பேசுகிறார். அதனை விடுங்கள் என்றார்.