X

கோவையில் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான இன்று (ஏப்ரல் 06), திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, கோவை தெற்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், இந்த முறை கோவையில் திமுகவின் செல்வாக்கை நிலைநாட்டும் வகையில் ‘கோவை தெற்கு’ தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் மனுவை வழங்கியபோது, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் திரளாக உடனிருந்தனர்.

பாஜாகவின் வானதி சீனிவாசன் மற்றும் பிற முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், செந்தில் பாலாஜியின் இந்த வரவு கோவை தெற்குத் தொகுதியில் நட்சத்திரப் போட்டியை உருவாக்கியுள்ளது.