X

வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது முதல்வரை புகழ்ந்து பேசிய அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுரை!

தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத், தனது உரையின் போது முதலமைச்சர் ஜோசப் விஜய்யைப் புகழ்ந்து பேசுவதிலேயே அதிக கவனம் செலுத்தியதால், குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் “புகழுரைகளைக் குறைத்துக்கொண்டு, தயாரித்து வந்த வேளாண் நிதிநிலை அறிக்கையை மட்டும் வாசியுங்கள்” என அறிவுறுத்தினார்.

முன்னதாக ‘கோட்சூட் அணிந்த விவசாயி முதல்வர் விஜய்’ என்று நெகிழ்ச்சியுடன் வர்ணித்துப் பேசிய அமைச்சர் வினோத், முதல்வர் விஜய் பேசுவதே தலைப்புச் செய்தி அல்லது அவரைப் பற்றி பேசுவதே தலைப்புச் செய்தி – பண நாயகத்தை வென்றவர் முதல்வர் என்று வர்ணித்து கொண்டிருந்தவர், ஸ்பீக்கரின் கண்டிப்பையடுத்து “விவசாயிகளின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் நமது அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்” என்று உறுதியளித்துத் தனது பட்ஜெட் உரையைத் தொடர்ந்து வாசித்தார்.