X

ஜம்முவின் எல்லைப்புற மாவட்ட இளம் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி!

ஜம்முவின் எல்லைப்புற மாவட்டங்களைச் சேர்ந்த இளம் பெண்களைப் பாதுகாப்புப் படைகளில் சேர்ப்பதற்காக, ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்போடு இணைந்த ‘சேவா பாரதி’ அமைப்பு ‘பிராஜெக்ட் வீராங்கனா’ (Project Veerangana) என்ற சிறப்புப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது.

ராணுவம் மற்றும் காவல் துறைகளில் சேர வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஏராளமான இளம் பெண்கள், தினமும் அதிகாலையிலேயே இந்த முகாம்களில் குவிந்து பாதுகாப்புப் படைகளில் தற்போது பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் நேரடி மேற்பார்வையில் கடுமையான உடற்பயிற்சிகளையும், தற்காப்புக் கலைகளையும் கற்று வருகிறார்கள்.

எல்லைப் பகுதியில் வாழும் பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும், நாட்டின் பாதுகாப்பில் பங்கெடுக்கும் வாய்ப்பையும் உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்தத் தங்கும் வசதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சி முகாம்கள் அனைத்தும், பங்கேற்கும் பெண்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.