ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியுல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த ஆரம்பத்தில் நடிகர் விஜயின் த.வெ.க-வின் பில்டப் மிகப்பெரிய அளவில் இருந்ததோடு, அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட சென்னை, பெரம்பூர் மற்றும் திருச்சி தொகுதிகளில் வேட்பாளர் மனு தாக்கலின் போது, அதிரடி காட்டியவர் தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து பின்வாங்கி வருவது அக்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய் இன்று தான் போட்டியிடும், சென்னை, பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு முறையான அனுமதியையும் பெற்று விட்டதாக சொல்லி வந்த த.வெ.க-வினர், திடீரென்று பிரச்சாரம் ரத்து என்று தெரிவித்துள்ளனர்.
இது முதல் முறை என்றால் ‘சரி’ என்று சொல்லலாம், ஆனால் விஜய் பிரச்சாரத்துக்கு வருவதாகச் சொல்லிவிட்டு பல்பு கொடுப்பது இது எத்தனையாவது முறை எனத் தெரியாமல் பெரம்பூர் வாக்காளர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
“வீடு வீடா வருவார்னு வாசல்ல காத்துக்கிட்டிருந்தா, கடைசி நேரத்துல இப்படி ‘கட்’ பண்ணிட்டாரே” என்று ரசிகர்கள் அப்செட்டில் இருக்க, எப்போதுதான் அவர் களத்துக்கு வருவார் ? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அவரது கட்சி நிர்வாகிகளே விழி பிதுங்கி நிற்பது ஒரு பக்கம் இருந்தால், தேர்தல் முடிவுக்கு முன்பாகவே தங்களுக்கு விஜய் இப்படி பில்டப் அல்வாவை கொடுத்து விட்டாரே என்று, பெரம்பூர் தொகுதி மக்கள் பெரும் கவலையில் இருக்கிறார்கள்.