திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
திமுக கூட்டணியில் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி இருந்தோம். நாங்கள் வைத்த எந்த கோரிக்கைகளையும் திமுக அரசு பரிசீலிக்கவில்லை. தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சி தான் நடந்து வருகிறது. அதிகாரிகளின் பேச்சை கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுக புறக்கணித்திருக்கிறது.
திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் அறிவுரை கூறி உள்ளனர்.
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இரண்டு தொகுதிகளை கேட்டது, ஆனால் ஒன்று தான் தருவதாக சொன்னார்கள்.
தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுகிறது, என்பதை அதிகாரப்பூர்வர்மாக அறிவிக்கிறேன்.
ஆதரவு இயக்கங்களுடன் கலந்தாலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்..
இவ்வாறு அவர் தெரிவித்தார்.