X

தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாறக்கூடும் – வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை பிற்பகலுக்கு மேல் புயலாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலவும் உயர் அழுத்தப் பகுதி (Ridge) வலுவிழந்து மேற்கு நோக்கி நகரத் தொடங்கும் என்பதால், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதிசை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

அடுத்த 48 மணி நேரத்திற்கு இது வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதனைத் தொடர்ந்து வரும் 48 முதல் 72 மணி நேரத்திற்கு இடைப்பட்ட காலம்தான், இந்தப் புயலின் இறுதிக்கட்டப் பாதையையும், அது கரையைக் கடக்கும் இடத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான நேரமாக அமையும்.

ஏனெனில், அந்தச் சமயத்தில் இரு வேறு உயர் அழுத்தப் பகுதிகள் புயலின் நகர்வைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முற்படும் என்பதால் அதன் திசையில் மாற்றங்கள் ஏற்படலாம்.