தலைநகர் டெல்லியில் யமுனை நதியின் நீர்ச்சுற்றுலா மேம்பாட்டிற்கும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் ஏதுவாக அம்மாநிலத்தின் முதல் யமுனை நதி க்ரூஸ் (Yamuna River Cruise) சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
சோனியா விஹார் மற்றும் ஜகத்பூர் இடையே இயக்கப்படும் இந்தச் சூழலியல் நட்பு மின்சாரப் படகுகளில் (electric boats) சுமார் 40 நிமிடங்கள் வரை பயணம் செய்யும் வகையிலான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முப்பது பயணிகள் ஒரே நேரத்தில் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் (AC cruise) வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் படகுச் சேவைக்கான கட்டணம் ஒரு நபருக்கு ஐநூறு ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், தலைநகரின் இயற்கை அழகை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது புதியதொரு உல்லாச அனுபவமாகவும் மாறும்.