திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. இப்பணிக்குத் தக்கார் ரா. அருள்முருகன் தலைமை வகித்தார். இணை ஆணையர் ஆ. அருணாசலம் முன்னிலை வகித்தார்.
உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 4 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 205-ம், தங்கம் 1022 கிராம், வெள்ளி 22,292 கிராம், பித்தளை 59,040 கிராம், செம்பு 4,362 கிராம், தகரம் 11,118 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1447-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் துணை ஆணையர் ந. யக்ஞ நாராயணன், முதுநிலை கணக்கு அலுவலர் சங்கரன், உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன், லோகநாதன், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வாளர்கள் பேச்சியம்மாள், ஆனந்தராஜ், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன், சுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள், அயற்பணியாளர்கள் இணைந்து ஈடுபட்டனர்.