அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு சான்றளிக்க கனடா மறுத்ததற்குப் பதிலடியாக இந்த வரி நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும், அனைத்து கனடா விமானங்களுக்கும் சான்றிதழை அமெரிக்கா ரத்து செய்யும் என்றார்.
இந்த நிலையில் மேற்கு கனடாவில் எண்ணை வளம் மிக்க ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பிரிவினைவாத குழுவிற்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறும்போது, கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.