X

ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட விஜய்!

அரசியல் கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில், தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற விஜயின் த.வெ.க தனித்து போட்டியிட்டு 108 இடங்களை கைப்பற்றியுள்ளார். திமுக மற்றும் அதிமுக என்ற மாபெரும் கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு த.வெ.க தமிழக அரசியலில் தனி வரலாறு படைத்திருக்கிறது.

தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்பதற்கான பணிகளில் த.வெ.க தலைவர் விஜய், தீவிடம் காட்ட தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்த ஆதரவை யார், யார் அளிக்கப்போகிறார்கள் என்பது அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தைகள் திரை மறைவில் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரியுள்ளார். இது தொடர்பாக தமிழக கவர்னருக்கு அவர் மெயில் மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பு உள்ளார். அதில் ஆட்சி அமைப்பதற்கு தன்னை அழைக்க வேண்டும் என்றும் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.