தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 13) கும்மிடிப்பூண்டியில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் முறையான அனுமதி வழங்கிய பின்னரும், கடைசி நேரத்தில் இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நீண்ட நேரமாகக் காத்திருந்த அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த அதிருப்திக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே சென்னை மற்றும் காரைக்குடி பகுதிகளில் திட்டமிடப்பட்ட பிரச்சாரப் பயணங்களும் இதேபோல் ரத்து செய்யப்பட்ட நிலையில், விஜய்யின் இந்தத் தொடர் பின்வாங்கல் கட்சித் தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும் வழிவகுத்துள்ளது.
முக்கியத் தலைவர்கள் களத்தில் இறங்கித் தீவிரமாகச் சுழன்று வரும் வேளையில், தவெக தரப்பில் நிலவும் இந்தத் திட்டமிடல் குளறுபடிகள் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமோ என்ற விவாதம் எழுந்துள்ளது.