X

விஜய் வருகையால் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது – எம்.பி மாணிக்கம் தாக்கூர்

விருதுநகரில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததால் கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன். இது நான் வைகோவிடம் கற்றுக்கொண்ட பாடமாகும்.

விஜய் வருகையால் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. காங்கிரஸ் என்பது தேச சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி. மற்றவர்கள் தொடங்குவது காங்கிரஸ் கட்சியல்ல. நேர்மையான அதிகாரியான தலைமைச்செயலாளர் முருகானந்தத்தை மாற்றியது கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பினால் இந்தியா முழுவதும் 272 தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 20 தொகுதிகளும், தென் மாநிலங்களில் 66 தொகுதிகளும், வடமாநிலங்களில் 200 தொகுதிகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தென் மாநில எம்.பி.க்களின் கோரிக்கை எதுவும் எடுபடாமல் போய்விடும். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் கண்டித்ததை வரவேற்கிறேன்” என்றார்.