X

இந்துக்களுக்கு மேற்கு வங்க மாநிலம் பாதுகாப்பானது அல்ல – சுவேந்து அதிகாரி பேச்சு

மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி, மாநிலத்தில் சனாதன தர்மம் பாதுகாப்பனது அல்ல எனக் குற்றம் சாட்டியுள்ளார். தெற்கு 24 பர்கானசில் உள்ள சாகர் ஐலேண்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு சுவேந்து அதிகாரி பேசியதாவது:-

சாமி சிலைகள் சிறைச்சாலை வேன்களில் போலீஸ் உதவியுடன் ஏற்றப்பட்டன. ஆனால் ஒரு நபர் கூட கைது செய்யப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் சனாதன தர்மம் மற்றும் இந்துக்களுக்கு மேற்கு வங்க மாநிலம் பாதுகாப்பானது அல்ல என்பதற்கு வழிவகுத்துள்ளன.

காவல்துறையினர் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.