Tamilசெய்திகள்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் – சதம் விலாசிய விராட் கோலி

இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இன்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

இந்நிலையில் டெல்லி அணிக்காக இந்திய வீரர் விராட் கோலி விளையாடி வருகிறார். இன்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி – ஆந்திரா அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். அதன்படி முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். மேலும் அதிவேகமாக 10 ஆயிரம் முதல் 11, 12, 13, 14, 15, 16 ஆயிரம் ரன்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். சச்சின் 538 போட்டிகள் விளையாடி 60 சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலி 330 போட்டிகளில் 58 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.