கிறிஸ்துமஸ் பண்டிகை – தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆர்.சி.சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக சென்னை சாந்தோம் தேவாலயம், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கதீட்ரல் பேராலயம், நுங்கம்பாக்கத்தில் உள்ள புனித தெரசா தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், நாகை வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்றது.
